வழிசெலுத்தல்

600 தற்காலிகப் பணியிடங்களுக்கு டிசம்பர் – 2022 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

By: InfoTechies | Last updated on: December 27th, 2022 at 11:36 am

அரசாணையில், ஏனையவற்றோடு, 2008-09 ஆம் கல்வியாண்டில் 100 அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தியும், உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் 100 பள்ளிகளுக்கு, பள்ளி ஒவ்வொன்றிற்கும் இரண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.5500-175-9000 என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும், இவ்விரண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் ஒரு பணியிடத்தை 2008-09-ஆம் கல்வி ஆண்டிலும், மற்றொரு பணியிடத்தை 2009-10ஆம் கல்வி ஆண்டிலும் நிரப்ப அனுமதியளித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் 100 பள்ளிகளுக்கு பள்ளி ஒவ்வொன்றிற்கும் 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.6500-200-10500 என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட வெளியிடப்பட்டுள்ளது. காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள்.

பார்வை இரண்டில் காணும் அரசாணையில், 2008-2009 ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 600 தற்காலிகப் பணியிடங்களுக்கு 01.07.2018 முதல் 31122020 வரையிலும், பார்வை மூன்றில் காணும் அரசாணையில் 912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 01.01.2019 முதல் 31.12.2021 வரையிலும், தொடர் நீட்டிப்பு செய்து ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

3.மேற்காணும் 600 தற்காலிகப் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு முடிவுற்ற நிலையில், இப்பணியிடங்களுக்கு 01012021 முதல் 3112.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். இப்பணியிடங்களுக்கு டிசம்பர்-2022 ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அரசை கொண்டுள்ளார். கேட்டுக்

4.மேற்குறிப்பிட்டுள்ள 600 தற்காலிகப் பணியிடங்களுக்கு 01012021 முதல் 31122023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், பார்வை ஒன்றில் காணும் அரசாணையின்படி ஒப்பளிப்பு செய்யப்பட்ட 600 (2008-09இல் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 100 பட்டதாரி ஆசிரியர் 500 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்) தற்காலிகப் பணியிடங்களுக்கு டிசம்பர்-2022 ஆம் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான டிசம்பர்-2022 ஆம் மாதத்திற்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Application PDF
Download Notification PDF

  இந்த வேலையைப் பகிரவும்:
 
Change to English Language