
தமிழகத்தில் கடந்த 17ம் தேதி அன்று கல்வி உதவித் தொகை பெறுவதற்கான கிராமப்புற மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான விடைக்குறியீடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விடைக்குறிப்பு
தமிழகத்தில் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி படிப்பை தொடர்வதற்காக அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கு காரணமாக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தேர்வை அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே எழுத தகுதியுடைவர்கள்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 விகிதம் 4 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு கடந்த 17ம் தேதி அன்று நடைபெற்றது.
இத்தேர்வுக்கான விடைக்குறியீட்டை அரசு தேர்வு இயக்ககம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விடைக்குறியீடு சார்பாக ஏதெனும் மாற்றம் இருந்தால் மாணவர்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் trustexam2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்றும் அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
Download Notification PDF